Mar 18, 2010

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலஃபிய்யா தோற்றமும், வளர்ச்சியும்

இஸமாயில் ஸலபி

இலங்கையில் இஸ்லாமியக் கற்கை நெறியைப் போதிக்கும் 150 க்கும் அதிகமான அறபு மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை எவ்வித அடிப்படை இலட்சியமுமின்றி ஆரம்பிக்கப்பட்டு நகர்ந்துகொண்டிருப்பதை அவதானிக்கலாம். விரல் விட்டு எண்ணத்தக்க சில மத்ரஸாக்கள் விதிவிலக்காக இயங்கி வருகின்றன. இந்த அறபு மத்ரஸாக்களில் ஷதாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா| தனித்துவ முத்திரை பதித்துத் தனித்து விளங்குவதைக் காணலாம்.

இது கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட மஃஹத் என்ற வகையில் சிறப்புப் பெறுகின்றது. குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் சமுக மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் மேற்கொள்ளும் ஆலிம்களை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரி என்ற வகையிலும் இது சிறப்புப் பெறுகின்றது.

மார்க்கக் கல்வி, இலங்கை அரச பாடத் திட்டம் இரண்டையும் இணைத்துத் தனது பாடத்திட்டத்தை முன்னெடுத்த அறபுக் கல்லூரிகளில் முன்னணி மத்ரஸாக்களில் இடம்பிடித்ததிலும் இதற்குத் தனிச் சிறப்பு இருக்கின்றது. அத்துடன் மிகக் குறுகிய காலத்திற்குள் வளர்ச்சி கண்டு, பெரும் அளவில் பிரபலம் பெற்று இலங்கை இஸ்லாமியக் கல்லூரிகளில் ஜாமிஆ நளீமியாவுக்கு அடுத்த கட்டத்தை அடைந்த மத்ரஸாவாக இது மிளிர்ந்தமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தாருத் தவ்ஹீதின் தோற்றம், வளர்ச்சி, அதற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் குறித்துச் சில தகவல்களை பகிர்ந்துகொள்வதும், பதிவு செய்வதும் சிறந்தது என எண்ணுகின்றேன்.

தாருத் தவ்ஹீத் உருவாக்கம்:
ஷதாருத் தவ்ஹீத் கலாபீடம்| 1983 களில் உத்தியோகபூர்வமாக இயங்கினாலும், அதற்கு முன்னர் 1951 களிலேயே இதற்கான சிந்தனைகளும், முன்னெடுப்புக்களும் உதயம் பெற்று விட்டன.

இந்த நாட்டில் தவ்ஹீத் சிந்தனையை முதன் முதலில் பிரச்சாரம் செய்து அதற்கான தனியாக ஷஅன்ஸாரிஸ் சுன்னா| என்ற அமைப்பை 1947 இல் அல்லாமா அப்துல் ஹமீத் அல்பக்ரீ(ரஹ்) அவர்கள் உருவாக்கினார்கள். இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு ஆலிம்கள் இல்லாத குறையைக் கண்ட அவர்கள் இலங்கை மாணவர்கள் சிலரை அறபு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கச் செய்து அவர்கள் மூலமாக தஃவாவை முன்னெடுக்கும் முயற்சியை முன்னெடுத்தார்கள்.

அத்தோடு தவ்ஹீத் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த போது தனது ஆதரவாளர்களிடம் மார்க்க அறிவையும், தெளிவையும் ஏற்படுத்துமுகமாக ஜமாஅத் அமைக்கப்பட்ட ஒவ்வொரு இடங்களிலும் ஷதாருத் தவ்ஹீத்| என்ற பெயரில் மத்ரஸாக்களை உருவாக்கினார். இந்த வகையில் சாய்ந்தமருது மாளிகைக்காட்டில் 1951 இல் ஆரம்பமான ஷதாருத் தவ்ஹீத்| பாணகமுவ, பறகஹதெனிய, தல்கஸ்பிட்டி, கரடிக்குளி எனப் பல இடங்களுக்கும் விரிந்தது. இருப்பினும் ஆலிம்களின் பற்றாக்குறை, சமுக எதிர்ப்பு, அப்துல் ஹமீத் பக்ரீ(ரஹ்) அவர்களின் வெளிநாட்டுப் பயணம் போன்ற பல காரணங்களால் ஷதாருத் தவ்ஹீத்| முறையாக இயங்கவில்லை.

இதன் பின்னர், தாருத் தவ்ஹீதின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் N.P.ஆ. அபூபக்கர் சித்தீக் (மதனி) அவர்கள் மதீனாப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து, 1980 களில் நாடு திரும்பிய போது மீண்டும் உள்ளூர் மாணவர்களை மையமாகக் கொண்டு இந்த ஷதாருத் தவ்ஹீத்| மத்ரஸா என்ற மட்டத்தில் ஆரம்பித்துப் பின்னர் மஃஹத் என்ற மட்டத்தை அடைந்து அதே அடிப்படையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தாருத் தவ்ஹீதின் ஆரம்ப நிலை:
அனைவரும் நினைப்பதைப் போன்று ஷதாருத் தவ்ஹீத்| கலாபீடம் செல்வம் கொழிக்கும் நிலையில் ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரி அல்லளூ வறுமை நிலையிலும், அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிதான் ஷதாருத் தவ்ஹீத்| ஆகும்.

தாருத் தவ்ஹீதின் மாணவர்-ஆசிரியர்களது விடுதியாகவும், வகுப்பறையாகவும் பறகஹதெனிய-பொல்வத்தையில் இருக்கும் தக்கியா இருந்தது. பின்னர் மாணவர் தொகை அதிகரித்த போது அருகிலுள்ள வீடுகள் வாடகைக்கு வாங்கப்பட்டு அதில் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்க வைக்கப்பட்டனர். வகுப்பறை ஜாமிஅத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளியின் மேல்மாடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இன்று நூற்றுக்கணக்கான கிணறுகளை நாடு பூராகவும் வெட்டிப் பொது மக்கள் பாவணைக்கு விட்டிருக்கும் ஜமாஅத்தின் மாணவர்கள் அப்போது குளிப்பதற்குக் கிணறு வசதிகள் இருக்கவில்லை. வறுமை நிலையால் மாணவர்கள் மூலமே முதலாவது கிணறுகள் தோண்டப்பட்டன. குளிப்பதற்கு வசதியற்ற நிலை நீடித்ததால் மாணவர்கள் சுழற்சி முறையில் குளிக்குமாறு பணிக்கப்படும் நிலை இருந்தது. தண்ணீருக்கு அவ்வளவு தட்டுப்பாடு.

இதன் பின்னர் தனியான விடுதி வசதிகள், வகுப்பறை வசதிகளுடன் மத்ரஸா இன்று இருக்கும் இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. இந்த இடத்தில் மத்ரஸாவை மாற்றும் போது கூட தினமும் மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் உடல் உளைப்புச் செய்தனர்.

மாணவர்களுடன் சேர்ந்து இன்றைய அதிபர் மற்றும் முன்னால் ஆசிரியர்களும் சிரமம் பாராது வியர்வை சிந்தி உழைத்த காட்சிகள் இன்னும் எம் கண் முன்னால் நிழலாடுகின்றது.

கல்லூhயில் பணிபுரிவோர் தங்குவதற்காகத் தற்போது பொல்வத்தை மையவாடி அருகில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த இடம் வயல் நிலமாக இருந்தது. இந்த இடத்தை நிறைக்கும் பணியிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமத்தோடு ஈடுபட்டனர். அங்குதான் மத்ரஸா மாணவர்கள் குளிப்பதற்காக முதலாவது கிணறு ஆசிரியர்கள்-மாணவர்கள் மூலம் தோண்டப்பட்டது.

அப்போது பத்துப் பதினைந்து அடி வரை தோண்டப்பட்ட கிணற்றின் அடியில் பத்திக் போடப்பட்ட கட்டைக் கைச் சட்டை அணிந்த நிலையில் எமது பணிப்பாளர் மண்ணை வெட்டித் தாச்சியில் நிரப்பித் தந்த காட்சிகள், பகல் உணவு உண்டதும் பழைய டீ-சட்டையையும், நீளக் காற்சட்டையையும் அணிந்து கொண்டு காலம் சென்ற அஷ்ஷெய்க் மீரான் மவ்லவி அவர்கள் மாணவர்களை எதிர்பாராமல் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கனைத்துக் கனைத்துக் கிணறு வெட்டச் செல்லும் காட்சி மட்டுமல்லளூ அந்த கனைக்கும் ஓசைகளும் எமது காதுகளில் ரீங்காரமிடுவது போன்ற உணர்வுகள் இப்போதும் ஏற்படுகின்றது. அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்கள் ஒரு பெணியனுடன் மாணவர்களுடன் மாணவர் போன்று பணி செய்ததும், மாணவர்கள் வேலைக்குக் களவு செய்யும் போது கையில் நீண்ட பிரம்புடன் வேலை வாங்கியதும், வேலைக் கஷ்டம் பற்றி எமது தந்தை போன்றிருந்த அஷ்ஷெய்க் ஆ.ளு.ஆ முஸ்தபா மவ்லானா ஹஸரத்திடம் நாம் முறையிடுவதும், அவர் ஆறுதல் கூறி எமக்கு பிஸ்கட் வாங்கித் தருவதும், இவ்வாறு பலத்த சிரமங்களுடன் மத்ரஸா இயங்கி வந்தது.

வருடத்திற்குப் பல முறை தண்ணீர் வற்றி, வரட்சி விடுமுறை அளிக்கப்படும். 3 மலசலகூடம் மட்டுமே அப்போது இருந்தது. ஒன்று ஆசிரியர்களுக்கு. மற்றவை மாணவர்களுக்கு என்ற நிலை. தண்ணீர்த் தட்டுப்பாடு - இதனால் வருடத்தில் பல நாட்கள் மாணவர்களுக்குப் பலத்த உடல் உபாதைகள் என்றுதான் நாட்கள் நகர்ந்தன. ஆரம்பச் செய்திகள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், வறுமை நிலையில்தான் இந்த மத்ரஸா தோற்றம் பெற்றது என்பதையும் ஆரம்ப கால மாணவர்களினதும், அதிபர்-ஆசிரியர்களினதும் தியாகத்தை நினைவூட்டவும்தான் இந்தச் செய்திகளை இங்கே பதிவு செய்தேன்.

ஜாமிஆ நளீமியா தவிர்ந்த ஏனைய அறபுக் கல்லூரிகளில் பாடசாலைப் பாடத்திட்டம் ஆரம்பத்தில் போதிக்கப்படவில்லை. தாருத் தவ்ஹீத் கலாபீடத்திலும் ஆங்கிலம், தமிழ், கணிதம் - இவை மூன்றுமே போதிக்கப்பட்டது. பின்னர் சாதாரண தர - உயர் தரப் பாடத்திட்டங்கள் மத்ரஸாவின் கல்வித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டது. இந்த மாற்றத்திற்காகப் பெரிதும் உழைத்த ஆசிரியர்கள் என்ற வகையில் முஸ்தபா மவ்லானா அவர்களும், தமிழ் பாடம் நடத்தி வந்த காலம் சென்ற ரபீக் சேர் அவர்களும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்களாவர். இவ்வாறே தாருத் தவ்ஹீத் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே மத்ரஸாவுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்து அப்போது மாணவர் பொறுப்பாளராகவும், தற்போது கல்லூரியின் செயலாளராகவும் பணி புரியும் ஏ.எல். கலீலுர் ரஹ்மான் (ஆ.யு) அவர்களும் இதற்காக முயற்சித்தவர் என்ற வகையில் நன்றியுடன் நினைவு கூரத் தக்கவராகும்.

தாருத் தவ்ஹீதில் சாதாரண தர, உயர் தரப் பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்ட பின்னர் மஃஹத் மாணவர்கள் இப்பரீட்சைகளில் அதிகூடிய திறமையை வெளிப்படுத்தி மஃஹத்திற்கும் பெயர் பெற்றுக் கொடுத்தனர்.

இவ்வாறு குர்ஆன், ஹதீஸ், உஸூலுல் ஹதீஸ், உஸூலுல் பிக்ஹ், தப்ஸீர் போன்ற கலைகள் மஃஹதின் நிரந்தர ஆசிரியர்களாலும், பாடசாலைக் கல்வித்திட்டம் பெரும்பாலும் பகுதி நேர ஆசிரியர்களாலும் முன்னெடுக்கப்பட்டன. தாருத் தவ்ஹீதின் வளர்ச்சிக் காலத்தில் பாடசாலைக் கல்வித் திட்டத்தைப் போதிக்கவும் முழு நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்குக் கல்வித் திட்டத்துடன் விளையாட்டும் ஊக்குவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பணிப்பாளர் முதற்கொண்டு மீரான் மவ்லவி போன்ற ஆசிரியர்களும் மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவார்கள். விளையாட்டுத் துறையும் எமது ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்பட்டது.

இவ்வாறே மாணவர் மத்தியில் பேச்சாற்றலை வளர்ப்பதற்காக மாணவ மன்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர் மன்றத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் போது முதன் முதலாக ஷஉத்தமர் உமர்| என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். மன்ற முடிவில் ஆசிரியர் குறிப்பின் போது மீரான் மவ்லவி அவர்கள் அந்த உரையை உணர்வுபூர்வமாகப் பாராட்டினார்கள். அதுவே நான் மன்றங்களில் ஆர்வம் காட்ட அடிப்படையாக இருந்தது. இந்த மன்றங்கள் பேச்சாற்றலை வளர்த்ததுடன், சபைக் கூச்சத்தை நீக்கி உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தைத் தெளிவாக மக்கள் மன்றத்திற்கு வைக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

தஃவாவில் எழுத்துத்துறை மிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்த வகையில் ஷமஜ்மஉல் அஃப்கார்| (சிந்தனைத் தொகுப்பு) என்ற பெயரில் சுவரொட்டிப் பத்திரிகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு இன்று வரை தொடர்கின்றது.

இன்று ஜமாஅத்தின் மாத இதழாக மலரும் ஷஉண்மை உதயம்| அப்போது முத்திங்கள் இதழாக வெளிவந்தது. முஸ்தஃபா மவ்லானா அவர்கள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். அப்போது ஷஉண்மை உதயம்| தாருத் தவ்ஹீத் வெளியீடாகத்தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தாருத் தவ்ஹீத் நூலகம்:
தாருத் தவ்ஹீத் மாணவர்களுக்காகவும், பொது வாசகர்களுக்காகவும் ஆரம்பத்தில் நூலகம் தாருத் தவ்ஹீத் சேவை செய்து வந்தது. ஆரம்ப நூலகம் இன்றைய தாருத் தவ்ஹீத் கணனி மையத்தில் இயங்கி வந்தது. அதன் ஒரு பகுதி நூலகமாகவும், மறுபகுதி ஜமாஅத்தினதும், மத்ரஸாவினதும் காரியாலயமாகச் செயல்பட்டது.

அன்றைய நூலகத்தின் பெரும்பாலான அறபு நூற்கள் ஸாதிக் ஹாஜியார் அவர்களாலும், தமிழ் நூற்கள் சகோதரர் அலி அவர்களினாலும் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.

நூலக வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் காலம் சென்ற தமிழ் ஆசிரியர் றஃபீக் அவர்களும், ஆரம்ப நூலகராகப் பணியாற்றிய முனாஸ் (நளீமி) அவர்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டி ஊக்கமளித்தவர்களில் காலம் சென்ற றபீக் மாஸ்டர், முஸ்தஃபா மவ்லானா மற்றும் மிஹ்லார் (நளீமி), கல்லூரியின் செயலாளர் போன்றோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இந்த நூலகம் படிப்படியாக வளர்ச்சி கண்டு இன்று தனிக் கட்டிடத்தில் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான நூற்களுடன் அழகாகக் காட்சியளிக்கின்றது.

தாருத் தவ்ஹீதின் சாதனைகள்:
தாருத் தவ்ஹீத் சமுக அங்கீகாரம் பெற்ற ஒரு கல்வி நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், இலங்கைக் கல்வித் திணைக்களத்திலும் பதிவு செய்யப்பட்ட ஒரு கல்வி நிலையமாக ஆரம்பம் தொட்டே தாருத் தவ்ஹீத் திகழ்கின்றது. தாருத் தவ்ஹீதின் பாடத் திட்டத்தை, 1998 இல் மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகமும், ரியாத் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் பல்கலைக் கழகமும் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக் கழகங்களில் பல்கலைக் கழகங்களில் உள்வாரி மாணவர்களாகக் கல்வியைத் தொடர தகுதியைப் பெற்றிருக்கின்றனர். அத்துடன் கல்விக் கல்லூரிகளிலும் கல்வியைத் தொடரத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகம், குவைத் மஃஹத் தீன், ரியாத் இமாம் முஹம்மத் பின் ஸுஊத், மக்கா உம்முல் குரா பல்கலைக் கழகம், மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகம், ஐக்கிய இராச்சிய வேல்ஸ் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பலரும் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்ளூ தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

தாருத் தவ்ஹீதின் முதல் பட்டதாரி வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவரான நபீல் (ஸலபி) அவர்கள் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் Phன. பட்டம் பெற்று முதலாவது ஸலபி கலாநிதி என்ற நிலையை அடைந்துள்ளார்.

ஜஸீல் (ஸலபி) மலேசியா பல்கலைக் கழகத்தில் Phன. கற்கை நெறியைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார். ஆம்ஜத் அப்துர் ராஸிக் எனும் மாணவர் மதீனாப் பல்கலைக் கழகத்தில் ஹதீஸ் துறையில் கலாநிதிப் பட்டப்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

இவ்வாறே ஆ.யு.இ ஆ.Phடை பட்டத்தைச் சிலரும், டீ.யு.(ர்ழளெ) பட்டத்தை மற்றும் சிலரும், டீ.யு பட்டத்தைப் பலரும் பெற்றுள்ளனர்.

இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்களிலும் ஸலபியாவில் கற்றவர்கள் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரத்திலும் ஸலபிகளின் பங்கு மகத்தானதாகும். நிதானமாகவும், நடுநிலையாகவும், மக்கள் மத்தியில் குழப்பம் விழைவிக்காத விதத்திலும் ஸலபிகள் தஃவாப் பணியில் பணியாற்றி வருகின்றனர். எனினும், தாருத் தவஹீதின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இலட்சிய தாகத்தையும், இதை உருவாக்கியவர்கள் உழைத்த சிரமத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது தஃவாக் களத்தில் ஸலபிகள் இன்னும் அதிகமாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இஸ்லாமிய எழுத்துத் துறையை எடுத்துக்கொண்டால் அதிலும் ஸலபிகள் ஆழமாகத் தடம்பதித்து வருகின்றனர். இஸ்லாத்தின் சகல துறை சார்ந்தும் ஸலபிகள் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதுவதோடு பல்வேறு நூலாக்க முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் சத்தியத்தைத் துணிந்து சொல்லும் ஷஉண்மை உதயம்|, ஷசத்தியக்குரல்| என்ற இரு பத்திரிகைகளினதும் ஆசிரியர்களாக ஸலபிகள் பணியாற்றி வருவது ஒன்றே இலங்கை இஸ்லாமிய எழுத்துப் பணியில் ஸலபிகளின் ஆழமான பங்களிப்பினை நிரூபிக்கப் போதிய சான்றாகும்.

இவ்வாறு நோக்கும் போது குறுகிய காலத்தில் தாருத் தவ்ஹீத் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இருப்பினும் அதன் வளர்ச்சி வேகத்தோடு ஒப்பீடுகின்ற போது தற்போதைய சாதனைகளும், தற்போதைய கல்வி வளர்ச்சியும் போதாது என்ற உண்மையையும் மறுக்க முடியாது.

No comments: