குருனாகல் பறகஹதெனியாவை பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம் இர்ஷாத் (B.A) அவர்கள் அகில இலங்கை சமாதான நிதிவானாக நியமனம் பெற்றார். பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பலைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியுமாவார். தொழிற் திணைக்களத்தின் கண்டி வடக்கு தொழில் காரியாலயத்தில் தொழில் அதிகாரியாக (Labor officer) கடமையாற்றும் இவர் பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் ஜும்ஆப் பள்ளியின் செயலாளராக கடமையாற்றும் அதே வேலை பறகஹதெனிய தேசிய பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினரும், பறகஹதெனிய பட்டதாரிகள் சங்கத்தின் முதுனிலை உறுப்பினர் என பல்வேறு சமூக மற்றும் சமய நிறுவனங்களினூடாக பறகஹதெனிய வாழ் மக்களுக்கு தனது சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)
No comments:
Post a Comment