Feb 28, 2013

அகில இலங்கை சமாதான நீதவானாக பதவிப்பிரமாணம்

எமது அமைப்பின் தலைவர் அண்மையில் அகில இலங்கை சமாதான நீதவானாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டது தொடர்பான செய்தி ஜப்னா முஸ்லிம் இனையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அச்செய்தியை வாசகர்களோடு நாம் பகிர்ந்து கொள்கின்றோம். (இனைய வடிவமைப்பாளர்)

பறகஹதெனிய சிங்கபுர பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட எம். றிஸ்கான் முஸ்தீன் அவர்கள் கடந்த சில் தினங்களுக்கு முன்னர் குருநாகல் நீதவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார். எம்.அய்.எம் முஸ்தீன், ரஸீகா பேகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனாகிய இவர் பறகஹதெனிய தேசிய பாடசாலை, தாருத் தௌஹீத் அரபுக் கலாசாலை ஆகியவற்றின் பலைய மாணவருமான இவர் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ துறை இளமானிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வரும் இவர் உண்மை உதயம், அல்ஹஸனாத், சத்தியக் குரல், எங்கள் தேசம், வழிகாட்டி, தினகரன் ஆகிய அச்சு ஊடகங்களுக்கும்  இஸ்லாம்கல்வி.கொம், ஜப்னாமுஸ்லிம் ஆகிய இலத்திரனியல் ஊடகங்களிலும் சமூகம் மற்றும் சமயம் சார்ந்த ஆக்கங்களை வெளியிட்டு உள்ளார்.

TGL Travels & Tours (Pvt) Ltd. நிருவனத்தில் ஹஜ் மற்றும் உம்ரா பிரிவு முகாமையாளராக கடமையாற்றும் இவர் பறகஹதெனிய பட்டதாரிகள் சங்க உறுப்பினரும், பஸ்யால இப்னு உஸைமீன் பெண்கள் கல்லூரி ஆலோசனை சபை அங்கத்தவரும், பறகஹதெனிய தஃவா அமைப்பின் தலைவருமான இவர் பல்வேறு சமூக மற்றும் சமயப் பணிகளில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.