Aug 5, 2013

இப்தார் ஏற்பாட்டுடன் பயான் நிகழ்வு



PhotoPhotoPhotoPhotoPhoto

பறகஹதெனிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 04-08-2013 அன்று பறகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-மத்ரஸதுல் ஹுஸைனிய்யாவில் (காலம் சென்ற அமீன் ஹாஜியார் அவர்களின் இல்லத்தில்) மாபெரும் இப்தார் நிகழ்வுடன் கூடிய பயான் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் கிட்டத்தட்ட 300 போருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவை PDS அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் 'ரமழான் கற்பிக்கும் பாடங்கள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அடுத்த நாள் 05-08-2013 அன்று பறகஹதெனிய, பண்டாரகல பிரதேசத்தில் PDS இன் மூத்த உறுப்பினர் சகோதரர் இக்பால் அவர்களது இல்லத்தில் மாபெரும் இப்தார் நிகழ்வுடன் கூடிய பயான் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் கிட்டத்தட்ட 125 போருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவை அமைப்பின் மீடியாப் பிரிவு பொருப்பாளர் அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

PDS  உறுப்பினர்களின் பூரண ஒத்துலைப்புடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

எமது வாசகர்களோடு இரு நிகழ்வுகளிலும் எடுக்கப்பட்ட போட்டோக்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

தஃவா பிரிவு,
பறகஹதெனிய தஃவா அமைப்பு.

No comments: