Nov 23, 2017

நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள்?


‘நபி (ஸல்) அவர்கள் எந்த வருடம, எந்த நாள் பிறந்தார்கள்? என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு இருப்பதை அறியமுடிகின்றது! காரணம், எல்லோரையும் போன்று சாதாரனமாக பிறந்த ‘நபி (ஸல்) அவர்கள், பிறக்கும் போது யாரும் அவர்களின் பிறப்பை பற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. 40 வது வயதில் நபிப்பட்டம் கிடைத்தும் இவர்களின் பிறப்பு தொடர்பாகவும் ஏனைய சிறப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் தமக்குள் கருத்துக்களை பறிமாரிக் கொண்டனர்.
– டாக்டர் முஹம்மது தய்யிப் அன் நஜ்ஜார் (ரஹ்)
நபி (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்? எந்த நாள் பிறந்தார்கள்? என்பதில் பெரும்பாலும் பொதுவான கருத்து நிலவுகின்றது. அதாவது யானை வருடம் திங்கள் கிழமை என்பதில் பெரும்பாலும் உடண்படுகின்றனர். காரணம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக கேட்கப்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அந்த நாளிளே நான் பிறந்தேன்; அந்த நாளிலே நான் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன் ‘ 
என்றார்கள். ஆதாரம் முஸ்லிம் 1162
சிலர் ரபியுல் அவ்வல் 27 வெள்ளிக் கிழமை பிறந்தாக கூறுகின்றனர். ஆனால் இக்கருத்து ஷீயாக்காலிடம் இருந்து வந்ததாகும் என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
– அஸ்ஸீரா அந்நபவிய்யா (1-199)
ஆனால் பிறந்த தினம் எது? என்பதில் உலமாக்கள் பலத்த கருத்து முரண்பாட்டில் இருப்பதை அறிய முடிகின்றது!
1) ரபியுல் அவ்வல் 2
2) ரபியுல் அவ்வல் 8
3) ரபியுல் அவ்வல் 10
4) ரபியுல் அவ்வல் 12
ஆனால் ஏற்க்கத்தக்க கருத்து எதுவெனில், நபி (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் 8 க்கும் 12 இடையில் பிறந்திருப்பார்கள் என்பதேயாகும்.
புவியியல் மற்றும் கணக்கியல் சார்ந்த அறிஞர்கள் நபி (ஸல்) அவர்கள் பிறந்த திங்கள் கிழமை ரபியுல் அவ்வல் பிறை 9ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற கணக்கை சொல்கின்றனர்.
எகிப்தை சேர்ந்த மஹ்மூத் பாஷா அல்பல்கி இக்கருத்தை கூறுவதாகவும் இதனையே நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை நவீன காலத்தில் சீராக கோர்வை செய்த முஹம்மத அல் ஹில்ரி மற்றும் ஸபியுர் ரஹ்மான் முபாரக்பூரி ஆகியோர் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை பொருத்தவரை திங்கள் கிழமை தான் என்பதில் பெரும்பாண்மை அறிஞர்கள் உடன்படுகின்றனர்.
இப்னு குதைபா என்பவர் புதன் கிழமை என்று குறிப்பிட்டாலும் இது பிழையான வாதமாகும். ஒருவேளை நபி (ஸல்) அவர்கள் புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டமையால் அதனை அவர் மரணித்த தினமாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதேநேரம் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12 இல் தான் மரணமானார்கள் என்பதில் பெரும்பாண்மையினர் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.
இப்னுல் கல்பி அபூ முஹ்னிப் போன்றோர் நபி (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் பிறை 2 ல் மரணமானர்கள் என்று கூறினாலும் பிறை 12 என்பதே வலுவான கருத்தாக உள்ளது.
எனவே நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை தீர்மானிப்பதில் இவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தும் இதனை கொண்டாடுகின்றவர்கள், பெரும்பாண்மை அறிஞர்களால் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் உறுதிசெய்த நபி (ஸல்) அவர்களின் மரணித்த தினமாகிய ரபியுல் அவ்வல் 12 ஐ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக எடுத்துக் கொண்டுள்ளமை ‘பிறந்த தினத்தை அல்ல! இறந்த தினத்தை இவர்கள் கொண்டாடுகின்றார்கள்’ என்பது தெளிவாகின்றது!
நபி (ஸல்) அவர்கள் பிறந்தது ரபியுல் அவ்வல் பிறை 9 திங்கள் கிழமை என்பதே ஏற்புடைய கருத்தாக இருக்கின்றது!
ஆதாரம்: அஸ்ஸீரா அந்-நபவிய்யா – இப்னு கஸீர் (4-509)
பத்ஹுல் பாரி – இப்னு ஹஜர் (8-130)
மௌலவி M. ரிஸ்கான் முஸ்த்தீன் மதனி
21-11-17 ஹிஜ்ரி 3-3-1439

No comments: