Nov 23, 2017

குழந்தைகளின் மலசலத்தை கழுவுவதன் மூலம் வுளு முறியுமா?

ஒரு தாய் அல்லது தந்தை வுளுவுடன் இருக்கும் நிலையில் பிள்ளைகளின் மல சலத்தை கழுவுதல் மற்றும் அவர்களது பாம்பர்ஸை (குழந்தை அரையாடை)  (Diaper) மாற்றி விடுதல் என்பன வுளுவை முறிக்கமாட்டாது…
மாறாக அவர்களது கையில் பட்ட அசுத்தத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்..
மீண்டும் ஒரு முறை வுளு எடுக்க அவசியமில்லை.
– இஸ்லாமிய பத்வா சஞ்சிகை (22-66)
அவ்வாறே சுத்தம் செய்ய உபயோகிக்கப்படும் பொருள்களை தொடுதல் மற்றும் கையாளுதல் என்பனவும் வுளுவை முறிக்காது.
மேலும் இரத்தம், சிறுநீர் மற்றும் ஏனைய அசுத்தங்கள் வெறுமனே உடம்பில் படுவதன் மூலம் வுளு முறியாது.
ஆனால் குறித்த அசுத்தம் பட்ட இடத்தை நன்றாக கழுவ வேண்டும்.
– ஷேய்க் பின் பாஸ் (10-141)
மேலும் பிள்ளைகளை சுத்தம் செய்யும் போது அவர்களது மர்ம உறுப்பு பட்டால் கூட வுளு முறியாது.
காரணம் இச்சையுடன் மர்ம உறுப்பை தொட்டாலே வுளு முறியும்..
– ஷேய்க் இப்னு உஸைமீன் (11-203)
அல்லாஹ் மிக அறிந்தவன்.
மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
அழைப்பாளர்,
அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
அல்-கப்ஜி,
சவூதி அரேபியா!

No comments: