எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)
கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் எமது TGL நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. மக்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்ட TGL நிறுவனம் முஸ்லிம்களின் ஐந்தாவது மார்க்கக் கடமையான ஹஜ் அதனோடு சேர்த்து உம்ரா சேவைகளையும் சிறப்பாக செய்து வருகின்றது.
கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் எமது TGL நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. மக்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்ட TGL நிறுவனம் முஸ்லிம்களின் ஐந்தாவது மார்க்கக் கடமையான ஹஜ் அதனோடு சேர்த்து உம்ரா சேவைகளையும் சிறப்பாக செய்து வருகின்றது.
ஏன் TGL யை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்?
இலாபம் ஈட்டுவதை முழுமையான நோக்கமாக கொள்ளாமல் மக்கள் மனத்திருப்தியோடும், சிறப்பான வழிகாட்டல்களுடனும் தமது கடமைகளை செய்து முடிக்கும் அதே வேலை எமக்காக வேண்டி பிரார்த்தனையும் செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதனை ஈடுசெய்யும் முகமாக திறன்மிக்க முன்னேட்பாடுளுடன், சிறந்த திட்டமிடல்களுடனும் உங்களுக்கு எமது ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளை வழங்க முன்வந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
எமது பணிவான வேண்டுகோள்.....
நீங்கள் செய்யும் வணக்கம் தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்யப்பட வேண்டும்.
நீங்கள் செய்யும் வணக்கத்திற்காக உங்களால் செலவளிக்கப்படும் பணம், நேரம், காலம் வீணாக்கப்படக் கூடாது.
அல்லாஹ்வின் வீட்டுக்கு அழைக்கப்பட்ட விருந்தாளிகள் நீங்கள். எனவே உங்களுக்கு கிடைத்த பொன்னான, குறுகிய காலத்தை முழுமையாக பயன்படுத்தி மனநிறைவோடு இபாதத்துக்களை செய்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் என்ற வகையிலே நாம் செய்த பிழைகள், பாவங்களுக்கு பாவமண்ணிப்பு கேட்டு தூய மனிதர்களாக தாயகம் திரும்ப வேண்டும் என்பதே TGL நிறுவனத்தின் தாழ்மையான வேண்டுகோள்.
உம்ராவின் சிறப்புக்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடையில் (செய்த) பாவங்களுக்கு பரிகாரமாக உள்ளது. மேலும் (ஏற்றுக் கொள்ளப்பட்ட) நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜுக்குறிய கூலி சுவர்கத்தைத் தவிர வேறில்லை.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புகாரி 1773, முஸ்லிம் 3355
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் தொடருங்கள். நிச்சயமாக அவை இரண்டும் ஏழ்மையையும் பாவங்களையும் இரும்பின் கறைகளை (கொல்லனின்) உலை போக்குவதைப் போன்று போக்கிவிடும்.'
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாராம்: நஸாயீ 2630
உம்ராச் செய்யும் முறை
உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் 'லப்பைக்க அல்லா{ஹம்ம உம்ரத்தன்' என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம் என்று அழைக்கப்படும்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் உடை அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்திக்கொண்டு மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வதாகும். ஆண்களின் இஹ்ராம் துணி வெள்ளை நிறமாக இருப்பது சிறந்ததாகும். பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவிற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம்.
இஹ்ராம் அணிந்த நிலையில் தடுக்கப்பட்டவை.
1) தலைமுடியை மழித்தல், அல்லது குறைத்தல். (நகமும் இத்தோடு இணைக்கப்படுகின்றது.
2) ஆண்கள் தலையை மூடுதல்.
3) ஆண்கள் சேட், ட்ரவ்ஸர், அண்டர்வெயார், பெனியன் போன்ற தைக்கப்பட்ட ஆடைகளை அணிதல்.
4) ஆடையில், அல்லது உடலில் மணம் பூசுதல்.
5) தரைவாழ் மிருகங்களைக் கொல்லுதல், அல்லது வேட்டையாடுல்
6) திருமண ஒப்பந்தம் செய்தல்.
7) பெண்கள் முகத்தை, அல்லது இரு மணிக்கட்டுகளை ஆடைகளால் மூடுதல்.
8) கடமை முடியுமுன் இல்லற உறவில் ஈடுபடுதல்.
9) காலுறைகள் அணிதல்.
10) மனைவயியைக் கட்டியணைப்பதால், அல்லது சுயஇன்பம் பெறுவதால் இந்திரியம் வெளியேறுதல்.
குறிப்புக்கள்:
1) கைக்கடிகாரம் (வொச்), இடுப்பு வார், (பெல்ட்) போன்றவற்றில் தையல் இருந்தாலும் அவற்றை அணிந்து கொள்ளலாம்.
2) பாதணிகள் இல்லாதவர்கள் 'காலுறை' (மேஸ்) ஐ அதன் நீளத்தை நறுக்கிய பின் அணிய முடியும். ஆனால் கையுறை அணிய முடியாது.
3) இஹ்ராத்துடன் இருக்கும் ஒரு பெண் அவளது முகத்தை மூடுவதையும்,, இருமணிக்கட்டுகளை மறைப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன்போது, மார்க்கம் அவளுக்கென பிரத்தியேகமாக விதித்த சட்டங்களை ஆண்களைப் போன்று பேண வேண்டும். இஹ்ராத்துக்கு அப்பால் வற்புறுத்தியுள்ள கடமைகளை இஹ்ராத்தின் போது செய்வது தடையாக இல்லை எனில் அவற்றையும் பேணி நடக்க வேண்டும்.
4) ஒரு பெண் இஹ்ராம் அணிந்த பின்னால் 'மாதவிடாய்' ஏற்பட்டால் தவாஃப் செய்வது கூடாது. ஏனைய கடமைகளைச் செய்யலாம்.
5) ஓர் ஆணோ, பெண்ணோ இஹ்ராம் அணிந்து பயணிக்கின்ற போது உறக்கம் உஷ்ணம் போன்ற காரணிகளால் குளிப்பு கடமையானவர்களாகி விட்டால் குளித்த பின்பே தவாஃப் செய்ய வேண்டும்.
6) மக்களுக்கு தீங்கிளைக்கும் தேள், பாம்பு, எலி, காகம், விசர் நாய், பருந்து போன்ற விலங்குகளைக் கொல்லலாம்.
7)இஹ்ராத்தின் போது பெண்களுக்கென தனியான ஆடை அமைப்புக் கிடையாது.
(8) இஹ்ராத்தின் போது தடுக்கப்பட்டவைகளைச் செய்வதற்குரிய -ஃபித்யா- குற்றப் பரிகாரம் சமமானவை அல்ல. மாற்றமாக, ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகும்.
மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.
لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ
தமிழில்: லைப்பைக் அல்லா{ஹம்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக்.
ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ اَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمِتِكَ
தமிழில்: பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லா{ஹம்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.
ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். தவாஃப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாஃபுக்கு ஒழு அவசியமாகும். தவாஃபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புயத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் ஓரத்தை இடது தோள் மீது போடுவதாகும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாஃபை நிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்தோடு ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். தவாஃபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்கலாம்.
1. முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2. அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3. அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4. அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை மட்டும் அதன்பக்கம் உயர்த்திக்காட்டி 'அல்லா{ஹஅக்பர்' என்று சொல்வது. இம்முறையில் கையை முத்தமிடக்கூடாது. இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராமான செயலைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது அதையும் சேர்த்து தவாஃப் செய்ய வேண்டும். காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ளலாம். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லா{ஹ அக்பர் என்று கூறுவதோ நபிவழியல்ல. முந்திய மூன்று சுற்றுக்களிலும் 'ரம்ல்' செய்வது சுன்னத்தாகும். 'ரம்ல்' என்பது தனது இரு தோள் புஜங்களையும் அசைத்துக் கொண்டு, கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையும் சாதாரண நடையில் நடக்க வேண்டும். 'ரம்ல்' செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.
ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், துஆ செய்தல் போன்றவைகளை செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல்பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
தமிழில்: 'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்' என்ற துஆவை (அபூ தாவூத், ஹாகிம்) ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லா{ஹஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாஃப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புயத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமு இப்றாஹிமுக்குப் பின் சென்று தவாஃபுடைய சுன்னத் இரு ரக்ஆத்துகளை தொழ வேண்டும். முதல் ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல் யா அய்யுஹல் காஃபிரூன்), இரண்டாவது ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்{ஹவல்லா{ஹ அஹது) ஓதுவது சுன்னத்தாகும். மகாமு இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் ஹரத்தினுள் எங்கும் தொழுதுகொள்ளலாம்.
ஸஃயி
ஸஃயி என்பது ஸஃபா, மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாஃப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலைக்கு செல்லும் போது (ஸஃபா மலை மீது அல்ல)
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
(2:158)
என்னும் ஆயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவிற்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி, பெருமைப்படுத்தி அவனைப் புகழ்ந்து
لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ اْلمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ. لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ.
தமிழில்: லாஇலாஹா இல்லல்லா{ஹ வஹ்த{ஹ லாஷரீக்க ல{ஹ, ல{ஹல் முல்க்கு வல{ஹல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வ{ஹவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லா{ஹ வஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.
என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)
இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். ஆனால் இன்று சிலர் ஸஃபா மலையடியில் நின்று தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவிற்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும். மர்வா செல்லும் போது இரு பச்சை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை. விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருகி அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாஃப் மற்றும் ஸஃயை கீழ்மாடியில் செய்ய முடியாவிட்டால் மேல்மாடியில் செய்து கொள்ளலாம். ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல. மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவிற்காவது கத்தரிக்கப்பட வேண்டும். இதுவே நபி வழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும். இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக!
குறிப்பு: தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை. இடைவெளி நீளமில்லாமலும், ஹரத்தைவிட்டும் வெளியாகாமலும் இருக்க வேண்டும்.
மதீனாவை நோக்கி..........
மஸ்ஜிதுந் நபவியை தரிசித்தல்
1) நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவதற்காக எந்த நேரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. 'எனது இந்தப் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிரவுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலும் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரீ, முஸ்லிம்). ஆனால் நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ மற்றவர்களின் கப்ருகளையோ தரிசிப்பதற்காக பயணம் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் மூன்று பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் புனிதப் பயணம் மேற்கொள்ளக்கூடாது. அவை: மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்தப் பள்ளி, மஸ்ஜிதுல் அக்ஸா' என்பது நபிமொழி (புகாரீ, முஸ்லிம்)
2) மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவதற்காகப் பயணம் மேற்கொள்வதற்கும் ஹஜ்ஜிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தரிசனம் ஹஜ்ஜுக்கு முன்போ பின்போ நிகழ வேண்டும் என்பது ஹஜ்ஜின் சுன்னத்களிலோ அதன் முழுமைப்படுத்தலிலோ இல்லை. இந்தத் தரிசனம் ஹஜ்ஜுக்கு முன்போ பின்போ நிகழ வேண்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்திகள் யாவும் ஆதாரமற்றவை. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), அல்உகைலீ (ரஹ்), இப்னு தைமிய்யா (ரஹ்) ஆகியோர் இந்தக் கருத்தைத் தாங்கிய செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு முறையே அனைத்தும் பலவீனமானவை, ஆதாரப்பூர்வமானவையல்ல, இட்டுக்கட்டப்பட்டவை எனக் கூறியுள்ளனர்.
3) மஸ்ஜிதுந் நபவீயை அடைந்ததும் மற்ற மஸ்ஜிதுகளில் நுழையும்போது நடந்துக் கொள்வதைப் போல வலது காலை முன்வைத்து, 'பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி அல்லா{ஹம்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக, அவூது பில்லாஹில் அளீம் வ பி வஜ்ஹிஹில் கரீம் வ சுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைத்தானிர்ரஜீம்' என்று ஓதிக்கொண்டு நுழைய வேண்டும்.
4) பிறகு அங்கு தஹிய்யத்துல் மஸ்ஜித் இரு ரக்அத்கள் தொழ வேண்டும்.
5) பிறகு நபி (ஸல்) மற்றும் அன்னாரின் தோழர்களான அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரின் கப்ருகளுக்கு அருகே சென்று, அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து{ஹ, அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர், அஸ்ஸலாமு அலைக்க யா உமர், என்று கூறி விட்டு அங்கு தாமதிக்காமல் சென்று விட வேண்டும்.
6) மஸ்ஜிது குபாவைத் தரிசித்து அங்கு இரு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கதாகும். ஏனெனில், யார் தமது வீட்டில் சுத்தமாகி - உழூ செய்து பிறகு மஸ்ஜிது குபா வந்து இரு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு உம்ராவின் கூலி கிடைக்கும் என்பது நபிமொழி (அஹ்மத், நஸயீ)
7) பொது மைய வாடியான பகீஃ, உஹதில் ஷஹீதானவர்களின் கப்ருகள் ஆகியவற்றை ஸியாரத் செய்வதும் விரும்பத்தக்கதே. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அக்கப்ருகளை ஸியாரத் செய்துள்ளதுடன் அவர்களுக்காக துஆவும் செய்துள்ளார்கள். இது பற்றி பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது: 'கப்ருகளைத் தரிசிப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்துக்கொள்க! இனி அவற்றைத் தரிசியுங்கள்! (முஸ்லிம்). மேலும் நபி (ஸல்) அவர்கள், கப்ருகளைக் கண்டால், 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன், வ இன்னா இன்ஷா அல்லா{ஹ பிகும் லாஹிகூன், நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா' என்று கூற வேண்டுமென தமது தோழருக்குக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்.
1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தோவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும்.
2) நபியவர்களின் கபுரு இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது. அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாரு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க்க வேண்டும். நபியவர்களுடை தோழர்கள் நபியவர்களுடைய கபுரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
3) நபியவர்களது கபுரை சூழவுள்ள சிவரை அல்லது யன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயவாகும். இவ்வாரான ஒரு வழிகட்டளை நபியவர்கள் எமக்கு போதிக்கவில்லை. அதே வேலை எமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது எம்மை ஷிர்க் எனும் இணைவைத்தளுக்கு அழைத்துச் சென்று விடும்.
4) நபியவர்களின் கபுரைச் சுற்றி வலம்வருதல்.
5) நபியவர்களது கபுருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
6) பள்ளிக்கு வெளியவோ, பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது.
7) அதே வேலை சில மக்கள் மதீனாவுக்குவரும் போது அதினமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள். இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு இவ்வாறு பதில் கூறலாம். ' நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள். உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும் என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் 'நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.' நஸாயீலே பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.
பிரார்த்தனைகள்
குர்ஆனிலிருந்து..
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16
رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ
நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! 10:86
ஹதீஸிலிருந்து..
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ اْلعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَ دُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِِيْ، اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِىْ، وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ.
யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)
اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ،لاَ اِلَهَ إِلاَّ أَنْتَ.
யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)
اَللََّّهُمَّ إِنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اَللََّّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ،
யா அல்லாஹ்! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)
اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ، فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ. ( بخاري)
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன்னுடைய அடிமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கின்றேன். நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذَ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடனின் சுமை மற்றும் மனிதனின் ஆதிக்கம் அனைத்தை விட்டும் நிச்சயம் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)
اَللَّهُمَّ اجْعَلْ أَوَّلَ هَذَا النَّهَارِ صَلاَحًا وَأَوْسَطَهُ فَلاَحًا وَآخِرَهُ نَجَاحًا، وَأَسْأَلُكَ خَيْرَ الدُّنْيَا يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.
யா அல்லாஹ்! இந்த பகலின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكُ الرِّضَى بَعْدَ الْقَضَاءِ وَبَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَلَذَّةَ النَّظَرِ فِي وَجْهِكَ الْكَرِيمِ وَشَوْقًا إِلَى لِقَائِكَ مِنْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلا فِتْنَةٍ مُضِلَّةٍ ، أَعُوذُ بِكَ اللَّهُمَّ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَعْتَدِيَ أَوْ يُعْتَدَى عَلَيَّ أَوْ أكْسِبَ خَطِيئَةً مُخْطِئَةً أَوْ ذَنْبًا لا يُغْفَرُ.
விதியை பொருந்திக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது மன்னிக்கப்படாத தவறு மற்றும் பாவத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (தப்ரானி)
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.
யா அல்லாஹ்! கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)
اَللَّهُمَّ اهْدِنِيْ لِأَحْسَنِ الْأَعْمَالِ وَأَحْسَنِ الْأَخْلاَقِ لاَ يَهْدِي لِأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَقِنِيْ سَيِّئَ الْأَعْمَالِ وَسَيِّئَ الْأَخْلَاقِ لاَ يَقِي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ.
யா அல்லாஹ்! நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக! (திர்மிதி)
اََللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ، وَبَارِكْ لِيْ فِيْ ِرزْقِيْ.
யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக!. (மஜ்மஃ ஸவாயித்)
No comments:
Post a Comment