பறகஹதெனிய பிரதான வீதி
பறகஹதெனிய பெரிய பள்ளிவாசல் (ஜாமிஉல் அன்வர்)
பறகஹதெனிய பிரதேசத்தில் மலர்ந்துள்ள இளைஞர் தஃவா அமைப்பு கடந்த ஏழு மாதங்களாக பறகஹதெனிய இளைஞர்களுக்கு மத்தியில் பல்வேறு தஃவா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். நடப்பு உலகத்தில் இளைஞர்களை வழிகெடுப்பதற்காக யூத, நஸராக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கையில் முஸ்லிம் இளைஞர்களை மையப்படுத்திய இவ்வாரான அமைப்புக்கள் காலத்தின் தேவை எனலாம். கட்டாயமாக இது விடயத்தில் முஸ்லிம் உம்மத்தின் சமூக மற்றும் சமய அமைப்புக்கள் கரிசனை செலுத்தியாக வேண்டும்.
பறகஹதெனியாவிலும் வெளிப்பிரதேசங்களிலும் இடம்பெறும் தஃவா நிகழ்சிகளில் இவ்வமைப்பு தனது அங்கத்தவர்களை ஆர்வத்துடன் பங்கு பற்றவைக்கும் அதே வேலை ரமழான் வசந்தத்தில் பறகஹதெனிய பிரதேசத்தில் உள்ள குக்கிரமங்களில் இதுவரை 12 சன்மார்கச் சொற்பொழிவுடன் இப்தார் நிகழ்சிகளை ஏற்பாடு செய்தமை பிரதேச மக்களுக்கு மத்தியில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொறு நிகழ்சியிலும் 150 தொடக்கம் 200 பேர் வரை கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதே வேலை தனது அங்கத்தவர்களுக்கு மத்தியில் டுவிடர் குருந்தகவல் சேவை ஒன்றையும் தாஃவா நிவ்ஸ் (dawahnews) என்ற பெயரில் தமது நிகழ்சிகள் மற்றும் இஸ்லாமிய போதனைகளை அனுப்பி வருகின்றது.
மேலும் ரமாழான் இருதிப் பத்தை உயிர்பிக்கும் முகமாக ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்மாப் பள்ளியில் இரவு நேர தர்பியா நிகழ்சியை நடாத்தியது. நல்லிரவு 12 மணி தொடக்கம் ஸஹர் வரை இடம் பெறும் இத்தர்பியாவில் அல்குர்ஆன் விளக்கம் , அல்குர்ஆன் திலாவத், நபியவர்களது வாழ்க்கையில் இருந்து, முஹாஸபா மற்றும் தவ்பா என நிகழ்சி நிரலை அமைத்துள்ளதுடன் இறுதியில் கியாமுல்லைல் தொழுகை இடம்பெற்றது.
அதே வேலை இன்ஷாஅல்லாஹ் புனித பெருநாள் தினத்தில் இளைஞர்களுக்கான விஷேட நிகழ்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பெருநாள் மறுதினம் கிழக்கு மாகணத்திற்கான இரண்டு நாள் தஃவா சுற்றுலா ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வமைப்பின் நிருவாகத்தினர் தொடர்பான விபரம் பின்வருமாறு
தலைவர்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)
உபதலைவர்: சகோ. இர்பான் நஸீர் (செட்ரிக் ஒடொ பாட்ஸ் உரிமையாளர்)
செயலாளர்: உஸ்மான் ருவைஸ்தீன் (தொண்டர் ஆசிரியர்)
உபசெயலாளர்: ஹம்தான் (இஸ்லாமிய கற்கை துரை மாணவன்)
பொருளாலர்: முஹம்மத் சாகிர் (முகாமையாளர்- ஏ.எல்.எம் ஸ்டோர்ஸ்)
உப பொருளாலர்: முஹம்மத் அரூஸ் (முகாமையாளர்- அம்னா ஸ்டோர்ஸ்)
மீடியா பொருப்பாளர்: அஸாம் நஸ்மி (கணக்காய்வுப் பிரிவு கிரிஸ்டன் நிருவனம்)
நிர்வாக சபை உறுப்பினர்கள்
சகோ. ஷிபான் (ஸலபி) கிழக்கு பல்கலைக்கழகம்
சகோ. பய்ஸல் (லகீ ஸ்டோர்ஸ் உரிமையாளர்)
சகோ. மூபீன் (ஹிமாஸ் கிரைடிங் மில் உரிமையாளர்)
சகோ. அரபாத் (மெஸ்கோ உரிமையாளர்)
சகோ. அரபாத் (மெஸ்கோ உரிமையாளர்)
சகோ. ரஸீம் (முகாமையாளர்- மகீன் ஸ்டோர்ஸ்)
சகோ. கரீம் (அல் ராகீ உரிமையாளர்)
சகோ. கரீம் (அல் ராகீ உரிமையாளர்)
சகோ. பஸ்லீன் (முகாமையாளர்- வயம்ப ஹாட்வெயார்)
சகோ. அர்ஷாத் (முகாமையாளர்- ரியல் என்ரபைஸஸ்)
சகோ. ஹிஸ்பார் (முகாமையாளர்- மினா டிரவல்ஸ்)
சகோ. சியாஉர்ரஹ்மான் (தொண்டர் ஆசிரியர்)
.jpg)
