பறகஹதெனிய தஃவா அமைப்பு ஏன் உதயமானது?
அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் ஸலபி (மதனி)
பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) ஏற்பாட்டில் வெள்ளி 29-03-2013 அன்று பறகஹதெனிய, மஸ்ஜித் மாவத்தையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக அஷ்ஷெய்க் மஸீர் (அப்பாஸி) அவர்கள் 'முஸ்லிம் சமூகம் பின்னடைவதற்கான காரணிகள்' எனும் தலைப்பில் உரையாற்றினார். மாஷா அல்லாஹ் அதிகமான ஆண், பெண் இரு பாலாரும் கலந்து கொண்டு பிரயோசனமடைந்தனர்.