Jun 19, 2013

இறுதிப்பத்து நாட்களை அலங்கரிக்கும் அம்சங்கள்..

லைலத்;துல் கத்ர்
இவ்விரவில்தான் புனித அல்குர்ஆனின் இறக்கத்தின் தொடக்கம் இருந்தது.
நிச்சயமாக நாம் இதனை (அல்குர் ஆனை) மகத்துவமிக்க (புனித) இரவில் இறக்கிவைத்தோம். (அல்கத்ர்: வச:1)
இந்த வேதத்தின்மீது சத்தியமாக நாம் இதனை (அல்குர்ஆனை) அருள்பாலிக்கப் பட்ட ஓர் இரவில் இறக்கிவைத் தோம். எனவும் பிரஸ்;தாபிக்கின்றது. (அத்துகான்:- வச: 1-3)
இவ்வாறு அல்குர்ஆன் இதுபற்றி பிரஸ் தாபிக்கின்றது. மேற்கூறப்பட்ட திருமறை வசனங்களில் இருந்து அல் குர்ஆன் இறக் கியருளப்பட்ட இரவு ~~லைலத்துல் கத்ர்|| ~மகத்தான இரவு| ~அல்லைலத்துல் முபா ரகா| ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் சிறப்புகள் ~அருள்பாலிக்கப்பட்ட இரவு| என அழைக்கப்படுகின்ற அதே வேளை அது ரமளான் மாதத்திலேயே இறக்கின்றது என்ற உண்மையினையும் விளங்க முடிகின்றது.

இவ்விரவு ரமளானின் முதல் வரும் பத்தின் இரவுகளில் இடம்பெறுகின்றதா? அல்லது நடுப்பத்தின் இரவுகளில் இடம் பெறுகின்றதா? இறுதிபத்பத்தின் இரவு களிலா? என்ற எதுவிதமான விளக்கங் களும் மேற்படி வசனங்களில் இடம் பெற வில்லை. அதனால் குர்ஆனுக்கு விளக்க மாக அமைந்த நபி (ஸல்) அவர்களின் சொல், அல்லது செயல், அல்லது அங்கீகா ரத்தின் அடிப்படையில் அமைந்த அவர் களின் சுன்னாவில் அதற்கான விளக்கத் தைப் தேட வேண்டியது அவசியமாகின் றது.அவ்வாறு ஆய்வு செய்கின்ற போது ~லைலதுல் கத்ர்;| ரமளானில் இடம் பெறும் இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப் படை யான இரவுகளிலே இடம் பெறுகின்றது என்பது பற்றிய உண்மை நிலையினை பின் வரும் நபி மொழிகள் மூலம் உறுதி செய்ய முடிகிறது.
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப்பகுதியி லுள்ள பத்து நாட்களில் ~இஃதிகாப்| இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்பு வார்கள். இவ்வழக்கப்படி நபி (ஸல்;) அவர்கள் ஒரு மாதம் எந்த இரவில் இல்லம் திரும்பினார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்;த்தி னார்கள். அல்லாஹ் நாடிய (சட்ட) விசயங்களை அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
பின்னர் நான் இந்த பத்து நாட்கள் ~இஃதிகாப்| இருந்தேன். பிறகு கடைசி பத்து நாட்களில் ~இதிகாஃப்| இருக்கத் தோன்றியது. எனவே என்னுடன் ~இஃதிகாப்| இருந்தவர்கள் தமது இடத்திலேயே தங்கியிருக்கவும்.
~லைலதுல்கத்ர்| இரவு எனக்குக் காண் பிக்கப்பட்டது. பின்னர் அது என்னைவிட்டும் மறைக்கக்கப்படடு விட்டது. எனவே (அதனை அடைந்து கொள்ள விரும்புவோர்) கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங் கள்| என வந்துள்ளது. (ஆதாரம்: புஹாரி)
மற்றோர் அறிவிப்பில் ~ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் வரும் ஒற்றைப் படையான இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் எனக் இடம் பெற்றுள்ளது. (ஆதாரம்:- புஹாரி)
மேற்கூறப்பட்ட நபி மொழிகளிலிருந்து பின்வரும் அம்சங்கள் அறியக்கிடைக்கின் றன.
i) ~லைலத்துல் கத்ர்| இரவு ரமளானின் எப்பகுதியில் இடம்பெறும் என்ற விளக்கம் நபி(ஸல்) அவர்களால் கூட ஆரம்பத்தில் கணிக்க முடியாதிருந்திருக்கின்றது. அதனால் எப்பாடுபட்டாவது அதன் சிறப்பை அடைந்து கொள்ளவேண்டும் என்ற பேரார்வத்தின் வெளிப்பாடாக நடுப்பத்தில் ~இஃதிகாப்| வணக்கத்தில் ஈடுபட்டுள் ளார்கள்.
ii) ~லைலத்துல் கத்ர்| இரவு ரமளானின் இறுதிப்பத்தின் ஒற்றைப்படையான இரவு களில் ஓர் இரவில் நிகழும் என்ற உண்மை யினை நபி(ஸல்) அவர்கள் 21ஆம் இரவில் கண்ட கனவு உறுதிப்படுத்துகின்றது.
iii) ~லைலத்துல் கத்ர்| இரவில் அல்குர் ஆன் இறக் கியருளப்பட்டதாக குறிப்பிடும் திருமறை வசனத்தின் விளக்கமாக அவ் விரவு இறுதிப்பத்தில் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவு உறுதி செய்கின் றது. நபிமார்களின் கனவு (வஹி) இறை கட்டளையாக கொள்ளப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
iஎ) லைலத்துல் கத்ரை அடைய ~இஃதிகாஃப்| வணக்கம் ப+ரண துணை செய்யும்.
எ) அல்லாஹ்வின் தூதர்கள் ~வஹி| மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கும் செய்தியைத் தவிர வேறு செய்திகளை அறியமாட்டார்கள்.
27-ஆம்;;;;;;; இரவில் மாத்;திரம்;;;;;;; லைலத்;;;;;;;துல்;;;;;;; கத்;;;;;;;ர்;;;;;;; உண்;;;;;;;டா?
நமது பிரதேச மக்கள் ரமளான் 27 ஆம் இரவு மாத்திரம் ~லைலத்துல் கத்ர்| வேண்டி மார்க்கம் அனுமதித்ததும், அனுமதிக்காதது மான பலகிரிகைகளில் ஈடுபடும் வழக்க முடையோராhய் இருக்கின்றனர். இதற் கான காரணம் என்ன?
# இதுபற்றிய முழுமையான மார்க்க அறிவின்மை.
# நுணிப்புல் மேய்ந்தாற் போல் அமையும் மௌலவிகளின் உரைகள்.
# நாட்டு மரபு, பிரதேச பழக்கவழக்கம்,
# தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பின்வரும் நபிமொழி.
அதாவது: நபித்தோழர்களில் சிலரது கனவில் (ரமளானின்) கடைசி ஏழு இரவுகளில்
ஒன்றில் ~லைலத்துல் கத்ர்| காண்பிக் கப்பட்டது. அது பற்றி நபி (ஸல்) அவர் களிடம் கூறிய போது கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் உங்கள் கனவு ஒத்திருப்பதை காண்கின்றேன். ஆகவே அதனை தேடுபவர் (ரமளா னில்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் தேடிக்கொள் ளட்டும் எனக் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி).
மேற்படி நபிமொழியிலோ, அது போன்ற கருத்தில் அமைந்த வேறு நபிமொழிகளிலோ 27-ஆம் நாளில்தான் லைலத்துல் கத்ர் உண்டு என்பதற்கு எந்த விதமான ஆதார மும் கிடையாது.
நபித் தோழர்களின் கனவிற்கு விளக்க மளித்த நபி (ஸல்) அவர்கள் பிந்திய 27-ம் இரவில் அது அவ்வாண்டு நிகழ்ந்தமை யால் அவ்வாறு விளக்கமளித்தார்களே அன்றி, மாற்மாக 27-ஆம் இரவுகளில் மாத்திரம் தேடும்படியோ, அல்லது வருடா வருடம் அதில் நிகழுமென்றோ விளக்க மளிக்கவில்லை.
27-ஆம் நாளில்தான் லைலத்துல் கத்ர் இரவு இருக்குமானால் அதனை நபி (ஸல்) அவர்கள் 21-ஆம் நாள் இரவு ஒரு வருட மும், அவர்களின் தோழர்கள் ஒற்றைப் படையான மாறுபட்ட பல இரவுகளிலும் வௌ;வேறுவிதமாக கனவில் காண்பிக்கப் பட்டிருக்க மாட்டார்கள்.
27-ஆம் நாளில்தான் லைலத்துல் கத்ர் உண்டு என்ற வாதம் பல நபி மொழிக ளுக்கு முரணான வாதமாக இருப்பதுடன் அது சிலவேளை வேறு நாட்களில் இடம் பெற்று, 27-ல் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.
வருடந்;தோறும்; முயற்;சித்;தல்; குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித லைலத்துல் கத்ர் இரவு வருடந்தோறும் வரும் ரமளானின் இறுதிப்பத்தின் ஒற்றைப்படையான இரவு ஒன்றில் நிகழ்வதால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ~இஃதிகாஃப் வணக் கத்தில் ஈடுபட்டு அதனை அடைந்து கொள்ள முயற்சித்துள்ளார்கள் என்ற ஆதாரப+ர்வமான நபிமொழிகளை கவனித் தால் அவ்விரவு வருடாவருடம் வருகின்றது என்ற உண்மையினை அறியலாம்.
லைலதுல் கத்ரின் சிறப்பும் பிரார்த்தனையும்
நிச்சயமாக நாம் இதனை (குர்ஆனை) கண்ணியமிக் இரவில் இறக்கிவைத்தோம்.
கண்ணியமிக்க இரவு என்ன வென்று உமக்குத் தெரியுமா? அது ஆயிரம் மாதங் களைவிட சிறந்ததாகும். (அல்கத்ர் 1:3)
எவர்கள் லைலதுல் கத்ர் இரவில் இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த் தும் நின்று வணங்குகின்றாரோ அவரது முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின் றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (ஆதாரம்: புஹாரி)
மேலும் மனிதர்களின் ப+ரண வழிகாட்டி யான புனித அல்குர்ஆன் அதில் இறக்கிய ருளப்பட்டிருப்பது அதன் சிறப்பிற்கு இன் னும் அணி சேர்ப்பதாக அமைந்துள்ளது. புனித லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புடையது என்பதன் மூலம் அதன் மதிப்பை பறைசாற்ற வேறு எந்த சிறப்புக்களும் தேவையில்லை.
புனித லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றோருக்கு அதற்கு முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்;ளார்கள். (புகாரி).
லைலத்துல் கத்ரின் அடையாளம்
அதிகாலை வரை அது (அவ்விரவு) மயான அமைதியுடன் காணப்படும். (அல்கத்ர் :5) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
லைலத்துல் கத்ர் இரவின் அதகாலைச் சூரியன் ஒளி இழந்து காணப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதா ரம்: அப+தாவ+த்).
லைலதுல் கத்ரின் துஆ
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! புனித லைலத்துல்கத்ரை (அதன் அடை யாளங்களைக் கொண்டு) நான் அறியும் தருணத்தில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்? என வினவியபோது,
~~அல்லா ஹ{ம்ம இன்னக அஃபுவ்வுன் கரீமுன் துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ||
கருத்து ~~அல்லாஹ்வே! நீ (பாவங் களை) மன்னிப் பவன். சங்கைமிக்கவன். என்னை மன்னித்து விடுவாயாக! என பிரார்த்தனை செய்|| என பதிலளித்தார். (ஆதாரம்: திர்மிதி,).

நன்றி:  actj.lk

No comments: