Jul 17, 2013
பெண்களுக்கான விஷேட தஜ்வீத் வகுப்பு
பெண்கள் சமூகம் அல்குர்ஆனை திருத்தமாக ஓதி நன்மையை அடைந்து கொள்ளும் பொருட்டு அல்குர்ஆன் இறங்கிய மாதமாகிய ரமழான் மாதத்தில் பெண்களுக்கான விஷேட தஜ்வீத் வகுப்பு ஒன்றை பறகஹதெனிய தஃவா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பிரதி திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் காலை 9.00 மணி தொடக்கம் 10.30 வரை இவ்வகுப்பு நடாத்த திர்மானிக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். முதல் வகுப்பு இன்று (17-07-2013) காலை இடம் பெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது.
இவ்வகுப்பு ஆயிஷா சித்தீகா பெண்கள் கலாசாலையின் பட்டதாரி ஆலிமா உம்மு தர்வேஷ் அவர்களால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்படிக்கு,
பெண்கள் பிரிவு,
பறகஹதெனிய தஃவா அமைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment