![]() |
பறகஹதெனிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பறகஹதெனிய பிரதேச
மாணவ, மாணவியர் மத்தியில் மார்க்க அறிவை போதிக்கும் முகமாக குறுங்கால
பயிற்ச்சி நெறிகளை (தவ்ரா) இரு பிரிவுகளாக நாடாத்தி வருகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.
அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம் பெறும் தவ்ரா நிகழ்வுகளின் முதல் பிரிவினருக்கான கற்கைகள் இருதித் தருவாயை அடைந்துள்ளது. தரம் 1 முதல் 4 வரை ஒரு பிரிவாகவும் தரம் 5 முதல் 8 வரை இரண்டாம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இரண்டாம் பிரிவினருக்கு உரிய பயிற்சி நெறி இருதியை அடைந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் முதலாம் பிரிவினருக்கான பயிற்சி எதர்வரும் சனிக்கிழமை (20-07-2013) அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கு கொள்ளும் மாணவர்களை ஆர்வமூட்டும் முகமாக சிறந்த
பெறுபேருகளைப் பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்க
உள்ளோம். எனவே இம்மகத்தான பணியில் தாங்களையும் இணைத்துக் கொள்ளும் முகமாக
இந்நிகழ்வுக்கு தாங்களால் முடியுமான உதவிகளை (பணமாகவோ அல்லது பொருளாகவோ)
தந்துதவுமாறு பணவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
மேலதிக தகவல்களுக்கும் உங்கள் உதவிகளை கையளிப்பதற்கும் அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்களை தொடர்பு கொள்ளவும் 0773181811 அல்லது 0724328240
புனித ரமழான் மாதத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம்
செய்யும் இப்பணிக்கு உதவுவதன் மூலம் மகத்தான கூலிகளை எல்லாம் வல்ல அல்லாஹ்
தந்தருள்வானாக என பிரார்த்திக்கின்றோம்.
குறிப்பு:
இன்ஷா அல்லாஹ் இப்பணிக்காக உதவி செய்பவர்களுக்கு இந்நிகழ்சியின்
முழுமையான கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க எமது அமைப்பு தீர்மானித்துள்ளது.
இப்படிக்கு,
மாணவர் விவகாரப் பிரிவு,
பறகஹதெனிய தஃவா அமைப்பு.

No comments:
Post a Comment