May 13, 2013

4வது விஷேட தர்பியா நிகழ்ச்சி

பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) ஏற்பாட்டில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை 12-05-2013 அன்று பறகஹதெனிய, மஸ்ஜித் மாவத்தையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் விஷேட தர்பியா நிகழ்ச்சி ஒன்று இஷாத் தொழுகைத் தொடர்ந்து இடம் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.   

இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக  'உள்ளத்தால் ஒன்றுபடுவோம்' எனும் தலைப்பில் அல்லாமா அப்துல் ஹமீத் பக்ரி அவர்களின் சிந்தனையில் உதித்த தாருத் தௌஹீத் அரபுக் கலாசாலையின் பழைய மாணவரான அஷ்ஷெய்க் ஹுஸைன் (ஸலபி) அவர்கள் உள்ளம் தொடர்பான பல்வேறு விடயங்ளைச் சுட்டிக்காட்டி போலி ஒற்றுமைக் கோசங்களுக்கு சாவுமணி அடித்து உரையாற்றினார். அதிகமான ஆண், பெண் இரு பாலாரும் கலந்து சிறப்பித்த இக்கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளைப் பொருந்திக் கொண்டு நற்கூலி வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

No comments: