PDS அமைப்பின் தஃவாப் பிரிவின் முழு நேர ஊழியனாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தீனை மேலோங்கச் செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பறகஹதெனியாவைச் சேர்ந்த முஹம்மது நஸார் வேலைவாய்ப்பின் நிமித்தம் குவைத் நாட்டை நோக்கி கடந்த 11/05/2013 அதிகாலை பயணமானார். இவரை அவரது இல்லத்தில் சந்தித்த PDS அமைப்பினர் அவரது தஃவா ரீதியான சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கியது.
இந்நிகழ்வு PDS இன் தஃவா குழு ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் வாழ்க்கையில் பறக்கத் செய்ய வேணடும் என PDS உறுப்பினர்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம். PDS இன் மற்றும் ஒரு முக்கிய உறுப்பினரான முஹம்மது சாஜித் அவர்கள் குவைத்தில் பணி புரிந்து வருகின்றமையினால் அவருக்கான நினைவுப் பரிசும் சகோதரர் நஸார் இடம் கொடுத்து அனுப்பப்பட்டது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட போட்டோக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.


No comments:
Post a Comment