May 7, 2013

PDS இன் கண்டன அறிக்கை







 08-05-2013

கடந்த பல மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற பேரினவாத இயக்கங்களின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே பல இடங்களிலே தனது எதிர்ப்பைத் தெரிவித்து பேசிய முன்னால் கொழும்பு மாநகர சபை பிரதி மேயரும், இன்னால் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான அஸாத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை நாடறிந்த விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்திற்காக பேசிய ஒருவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கும் நடப்பு அரசாங்கம், அஸாத் ஸாலி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதாகவும் காரணம் காட்டும் அதே வேலை தேசிய பாதுகாப்பபுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய எத்தனையோ அமைப்புக்களை பாலூட்டி வளர்க்கின்றமை மிகவும் கண்டனத்துக்குறியது.

மக்கள் ஆட்சி நடைபெறக்குக் கூடிய இலங்கை போன்ற நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறுகின்ற இவ்வாரான கீழ்த்தரமான நடவடிக்கைகளை PDS கடுமையாக கண்டிப்பதுடன் அஸாத் ஸாலி கைது செய்யப்பட்டமையினால் கவலையில் இருக்கும் அவரது குடும்த்திற்கும் நண்பர்களுக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோதோடு அவரின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும்  முயற்சிகள் அனைத்தும் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்தாக வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பறகஹதெனிய தஃவா அமைப்பு
கண்டி வீதி, பறகஹதெனிய.

No comments: